Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, February 3, 2012

New post சம்பந்தமான டிப்ஸ்

அடுத்து  ப்ளாக் எழுத ஆரம்பிக்க வேண்டியது தான்.
மேலே new post என்ற பட்டனை கிளிக் செய்யுங்க
இப்ப posting, comments, settings, design, monetize, stats என்ற பட்டன்களுக்கு   கீழே new post, edit post, edit page என்று மூன்று பட்டன்கள் இருக்கும். நீங்கள் new post இல் இருப்பீங்க.

New post: 

இந்த new post ல நீங்க பதிவிட விரும்பற விஷயத்த டைப் பண்ண வேண்டியது தான். ஏதாவது போட்டோ வைக்க விரும்பினால் insert image கிளிக் பண்ணி உங்க hard disk ல இருக்கற படத்தை upload பண்ணிக்கோங்க. இல்லாட்டி வெப் ல இருந்தே படத்தை போடறதா இருந்தா அந்த படத்தை கிளிக் செஞ்சு drag and drop method ல posting ல எங்கே வேணுமோ (new post window) அங்க drop செஞ்சுடுங்க. படம் வந்துடும். இதே மாதிரி வீடியோ வேணும்னா 'insert a video' குடுத்து வெச்சுக்கோங்க. ஏதாவது website அ குறிப்பிடனும்னா வெறுமனே அந்த அட்ரஸ தராம, லிங்க் அப்படிங்க பட்டன கிளிக் பண்ணி குடுக்கலாம். மத்ததெல்லாம் பெரும்பாலும் உங்களுக்கு தெரிஞ்ச பட்டன்ஸ் தான். தெரியாட்டி அந்த பட்டன் கிட்ட கொண்டு போனா ஒருசின்ன tool tip வரும். அதை வெச்சு தெரிஞ்சுக்கலாம்.

Edit post:

இதுல நீங்க ஏற்கனவே டைப் பண்ணி வெச்சுட்டு போஸ்ட் பண்ண முடியாம போனது, பாதி டைப் பண்ணினது, ஏற்கனவே டைப் பண்ணினத எடிட் பண்ணறது எல்லாம் பண்ணிக்கலாம்.

Edit Pages  :

 இந்த option ஐ நான் உபயோகப்படுத்தியதில்லை.  சிலருடைய தளத்தில் பதிவுகளை category wise பிரிச்சிருப்பாங்க. main page அதாவது home page என்று ஒன்று இருக்கும். அதுல அவங்க contact details அல்லது அவங்க தயாரிக்கற பொருள் சம்பந்தமான standby page இருக்கும். அங்கிருந்து மத்த pages க்கு க்ளிக் பண்ணி போகலாம். அது மாதிரி நம்ம தளத்திலும் வெச்சுக்க இது உதவுது.    

Labels :

நம்ம ஸ்கூல் நோட்ல அந்த நோட் எது சம்பந்தமானதுன்னு லேபில் ஒட்டுவோம்ல. அதே மாதிரி உங்க பதிவு எது சம்பந்தமானதுன்னு இந்த லேபிள்ல குடுத்துட்டீங்கன்னா, அந்த வார்த்தைய யாராவது கூகிள் ல தேடும்போது கூகிள் உங்க வலைதளத்துல இருந்து காட்ட உதவும்.

Location  : 

இந்த பட்டன க்ளிக் பண்ணிட்டா, கூகிள் மேப்  வரும். அதை வெச்சு நீங்க தேவையான இடத்தை save பண்ணிக்கலாம்.  நீங்க எங்க இருந்து பதிவு போடறீங்க அல்லது எந்த இடத்தை பத்தி உங்க பதிவுல குறிப்பிடறீங்க அப்படின்னு காட்ட இது உதவும். இதை குடுத்த பிறகு உங்க பதிவ வெளியிட்டதும், location அப்படிங்கற பேர்ல ஒரு குறிப்பு உங்க பதிவுக்கு கீழ வரும்.

Post Option:

இதுல எதையும் மாத்த தேவை இல்லன்னு நினைக்கறேன். மாத்தணும்னு நினைச்சா உங்களுக்கு புரியற மாதிரி தான் options இருக்கு. மாத்திக்கங்க.

எல்லா கதையும் அடிச்சு முடிச்சுட்டா PUBLISH POST குடுங்க.

நீங்க ப்ளாக் டைப் பண்ண பண்ணவே SAVE NOW வொர்க் ஆகும். தேவைப்பட்டா நீங்களாகவும் save பண்ணிக்கலாம்

டைப் செய்த பிறகு உங்க பதிவு எப்படி மத்தவங்களுக்கு தெரியும்னு PREVIEW  பார்த்துக்கலாம். space  விடறது, படம் சரியான இடத்துல வைக்கறதுன்னு எல்லா correction - யும் இங்கயே சரி பண்ணிக்கலாம்.

(தொடரும்) 

 

6 comments:

D.Martin said...

Simple Explanation

ஆமினா said...

எளிய முறையில் சொல்லியிருக்கீங்க

வாழ்த்துக்கள்

பாலா said...

நான் முதன்முதலில் பதிவு எழுதத்தொடங்கிய போது மிகவும் தடுமாறினேன். அந்த பிரச்சனை யாருக்கும் இனி இருக்காது என்று நினைக்கிறேன். நன்றிங்க

Kumaran said...

புதிய பதிவர்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும் இந்த பதிவு.இப்பொழுதுதான் தங்கள் வலைக்கு வருகிறேன்.படித்தேன்.நன்று.நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.

'பரிவை' சே.குமார் said...

எளிய முறையில் சொல்லியிருக்கீங்க...

சாதாரணமானவள் said...

@ மார்டின், ஆமினா, குமரன், சே.குமார்

நன்றிங்க



@பாலா

ஆம். நம்மை மாதிரி புதியவர்கள் குழப்பமடையாமல் பதிவெழுத ஆரம்பிக்கவே இந்த முயற்சிங்க